உடலில் வேல் குத்தி தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடிய நபர்!

406 0

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் எனக் கோரி நபர் ஒருவர் தனது உடலில் வேல்களை குத்திக்கொண்டு பாராளுமன்ற வளாகத்தில் சற்றுமுன்னர் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் 700 ரூபாவுக்கு கூட்டு ஒப்பந்தம் செய்து தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த நபர், மகஜர் ஒன்றையும் பாராளுமன்ற  செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதோடு மகஜரை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்குமாறும் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

Leave a comment