சிவனொளிபாத மலைக்குச் சென்ற இளைஞர்கள் கஞ்சாவுடன் கைது

345 0

சிவனொளிபாத மலைக்குச் செல்லும் பிரதான பாலத்திற்கு அருகில் நேற்று  கஞ்சா மற்றும் சுருட்டு துண்டுகளைப் புகைத்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களை இன்று ஹட்டன் நீதி மன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்திலிருந்து சிவனொளிபாத மலையை தர்சிக்க வந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a comment