சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய நபரை பிடித்து நையப்புடைத்த மக்கள்

5390 21

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும், இன்றும் அதே நோக்கோடு அந்தப் பகுதிக்கு வந்தார் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர்.

அதனால் நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

எனினும்  2 மணிநேரத்துக்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்

தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த்தாகவும் பிடிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.

Leave a comment