வெளிநாடுகளினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கையின் குழந்தைகள் தொடர்பில் சந்தேகம்

5288 0

குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளை இலங்கையில் இருந்து தத்தொடுத்து வளர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக சுவிஸர்லாந்தில் இவ்விடயம் தொடர்பில் கடமையாற்றும் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். 

குறித்த குழந்தைகளை வளர்ப்பதற்காக வெளிநாட்டு பெற்றோர்களுக்கு சட்ட ரீதியான முறையில் அனுப்பப்பட்டிருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அவற்றில் சந்தேகம் இருப்பதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1948 ஆம் ஆண்டு சுவிஸர்லாந்தின் சமூக சேவையாளரான Alice Honegger மற்றும் இலங்கையின் சட்டத்தரணி ஒருவரான ருக்மனி தவனேசன் என்பவர்கள் ஒன்றிணைந்து சட்ட ரீதியான முறையில் இலங்கையின் குழந்தைகளை வெளிநாட்டு பெற்றோர்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரையில் 11,000 இலங்கை குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளுக்கும், 700 இலங்கை குழந்தைகள் சுவிஸர்லாந்திற்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படுவது சட்ட ரீதியான முறையில் இடம்பெற்று இருப்பினும் குழந்தையின் உண்மையான பெற்றோர்களிடம் இருந்த எந்த அடிப்படையில் குழந்தைகளை பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. 

குழந்தைகள் கடத்தப்படுதல் மற்றும் உண்மையான பெற்றோர்களுக்கு சரியான தகவல் வழங்கப்படாமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக குறித்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

குழந்தைகளின் உரிமைகள் தொடர்பில் 1997 ஆம் ஆண்டு சுவிஸர்லாந்தில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் வேறு பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை தத்தெடுக்கதற்கான சட்டம் மாற்றப்பட்டுள்ளது. 

1980 ஆம் ஆண்டு சுவிஸர்லாந்தின் சமூக சேவையாளரான Alice Honegger மீது இந்த விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிந்த போதிலும் சர்வதேச பொலிஸார் அவரை விடுதலை செய்துள்ளனர். 

எவ்வாறாயினும் குறித்த வேலைத்திட்டம் இன்று வரையில் நடைமுறையில் இருப்பதாகவும் குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

குறித்த வேலைத்திட்டம் சட்டவிரோமானதாக இல்லாதிருப்பினும் குறித்த குழந்தைகளின் இரத்த உறவுகளை கண்டுபிடித்து அவர்களின் வழங்குவதற்காகவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக குறித்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment