உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணம்

4401 461

மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணத்தை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது. 

முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

நாளை முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து- யாழ்ப்பாணம் 11.50 மணிக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு காலை 6.10 மணிக்கும் புறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a comment