கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள் – மனோ

543 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

​அதைவிட இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பினர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அலரிமாளிகைக்கு சென்று முன்னெடுத்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடன் இருந்தமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

700 ரூபாய் போதுமானதல்ல குறைந்தது 1000 ரூபாயே எமது கோரிக்கை இதில் எவ்வித மாற்றமுமில்லை. சம்பள அதிகரிப்பு ஊடாக அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியாதெனின் அதற்கான மாற்றுத்திட்டத்தைக் கொண்டு வரவும். இதில் அரசாங்கம் இவ்வளவு நாட்களும் தலையிடாமல் இருந்தமைக்கான காரணம் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.

இந்த நேரத்தில் நாடுபூராகவும் இந்த சம்பள அதிகரிப்புக்காகப் போராடும் மக்களுடன் நாமும் கைகோர்ப்போம். இது ​தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment