சிவடிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகளிடமிருந்து இசைக் கருவிகள் அனைத்தையும் மவுசாகலை நீர் தேக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பொலிஸார் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.
அவர்கள் அவ்விடத்திலிருந்து செல்லும் போது மிக புனிதமாக இறைபக்தியோடு செல்லவேண்டும் என்பதற்காக மீள பெற்று மீண்டும் திரும்பி செல்லும் போது அவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
இது கடந்த பல ஆண்டுகளாக இடம் பெற்று வருகின்றது. இருந்த போதும் நல்லதண்ணி நகரில் இவ்வாறான இசைக் கருவிகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று இம்முறை திறக்கப்பட்டுள்ளதால் அவ்வடத்தில் இப்பொருட்களை பெற்று அங்குள்ள புனிதத்தை இல்லாது செய்வதாக புகார் கிடைத்துள்ளது.
இது விடயமாக மஸ்கெலியா பிரதேச சபை தாங்கள் அனுமதி வழங்கவில்லை என தெறிவித்துள்ளதால் அந்த வர்த்தக நிலையத்தை அகற்ற வேண்டிய நிலை தோன்றியுன்னது என பொலிஸார் தெரிவித்தனர்


