ஞானசார தேரரை விடுதலை செய்வதில் அரசியல் உள்நோக்கம்- மேஜர் அஜித்

420 6

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த ஆகியோரும் வெவ்வேறாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை குறித்து கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஞானசார தேரரை விடுதலை செய்வதில் அரசியல் நோக்கம் காணப்படுவதாக மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று வர இருக்கும் நிலையில், சிறுபான்மை முஸ்லிம்களினதும், சிறுபான்மை கிறிஸ்தவர்களினதும் வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவை விட்டும் திருப்பும் நோக்கில் இவர் விடுதலை செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Leave a comment