வௌிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

332 0

வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

களுத்துறை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த 05 துப்பாக்கிகள் மற்றும் 05 தோட்டக்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

பதுரலிய, அத்வெல்தொட்ட பாலத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரும் இரத்தினபுரி, கலவானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment