2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குமாறு பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதிக்கு முன்னர் தமது யோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்குமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
வலுவான பொருளாதாரம் மற்றும் வளம்பெற்ற நாடு என்ற நோக்கத்தில் இம்முறை வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது.


