பிரபாகரன் காலத்தில் வடக்கு ஒழுக்கமாக இருந்தது -அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-

375 0

i3வடமாகாணனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆட்சிக் காலத்தில் ஒழுங்கமானதாக இருந்தது என்று தெரிவித்துள்ள அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அந்த ஒழுங்கமான நிலை இப்போது இல்லை என்று கவலை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணதம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதமத விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பான அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஓவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே மிகுந்த கஸ்ரத்தின் மத்தியிலும் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றார்கள். இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பெறுத்தவரையில் யுத்தத்திற்கு முன்னர் இருந்து கல்வி வளர்ச்சி தற்போது யுத்தத்தின் பின்னர் பின்தங்கியே காணப்படுகின்றது.
அதே போன்று பெண்கள் சிறுவர்கள் துஸ்பிரயோகங்களும் யுத்த்தின் பின்னர் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசரமான நிலை தற்போது காணப்படுகின்றது.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இங்கு இருந்த காலப்பகுதியில் அலுவலகங்களிலும், வீடுகளிலும், பாலியல் துஸ்பிரயோகங்களோ அல்லது கணவர் மனைவிக்கு இடையில் பிரச்சினைகளோ இல்லாத ஒழுங்கமான மாகாணமாக வடமாகாணம் காணப்பட்டிருந்தது.
இவ்வாறான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறான தண்டனைகளை அனுபவித்தர்கள் இன்று திருந்தி பிரபலமான பதவிகளை வகித்து வருகின்றார்கள்.
விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்து நிலை இங்கு ஏற்படுத்தப்பட வேண்டுமானால் இங்கு நீதிமன்றங்களையே நாங்கள் நாட வேண்டியுள்ளது. பொலிஸ் நிலையங்களினால் மட்டும் இவ்வாறான குற்றங்களை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது.