யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2019

21125 237


யேர்மனியில் 70 நகரங்களில் 19,20, தை, 2019 ஆகிய இரு நாட்களும் தமிழர் திருநாள் மிக விமர்சயாகக் கொண்டாடப்பட்டது. யேர்மனியின் முக்கிய இடங்களில் உள்ள எழுபது தமிழாலயங்கள் இம்முறை தைப் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் அந்த நகரத்தில் உள்ள பொதுமக்கள் இப் பொங்கல் விழாவினில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். சில இடங்களில் வங்கக்கடலிலே காவியமான தளபதி. கிட்டண்ணா உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி, மலர்தூவி, வணக்கம் செலுத்தி விட்டு தங்கள் தமிழர் திருநாள் நிகழ்வுகளை ஆரம்பித்தனர்.
பல தமிழாலயங்கள் ஐந்து ஆறு பானைகளை வரிசையாக வைத்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், புடைசூழ பொங்கல் பெருவிழாவைக் கொண்டாடியது சிறப்பாக இருந்தது. பானைகள் பொங்கி வழியும்போது மாணவர்களும் பெற்றோர்களும் பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரித்து மகிழ்ந்த காட்சி அட்டகாசமாக இருந்தது.
சில தமிழாலயங்களில் யேர்மனிய மக்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. யேர்மனியின் தலைநகரில் உள்ள பேர்லின் தமிழாலயத்தில் பொங்கற்பானை பொங்கி வழிந்தபோது ஆசிரியைகள் பறையடித்து மகிழ்ந்து கொண்டாடிய காட்சி அற்புதமாக அமைந்தது.

Leave a comment