இந்திய மீனவர்கள் 11 பேர் கடும் நிபந்தனையுடன் விடுதலை

233 0

கிளிநொச்சி, பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 13ம் திகதி குறிதத் பகுதியில் எல்லை தாண்டி மீள்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களை கடற்படையினரால் கைது செய்திருந்தனர். குறித்த 11 மீனவர்களையும் அன்று மாலை கிளிநொச்சிக்கு அழைத்து வந்த கடற்படையினர் அவர்களை கிளிநாச்சியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர். 

குறித்த பதினொருபேரையும் கிளிநாச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை இன்று 21ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டிருந்தார். 

குறிதத் வழக்கு இன்று (21) கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி, குறித்த பதினொருபேரையும் இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட கூடாது எனவும், அவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்ததுடன், விசைபடகின் உரிமையாளர் வரும் மார்ச் மாதம் படகின் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், தவறும் பட்ச்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்திரவிட்டுள்ளார். 

விடுதலை செய்யப்பட்ட இந்தி மீனவர்கள் விரைவில் நாடு திரும்பவுள்ளனர். 

Leave a comment