கட்டிடக்கலையின் உலகத் தலைநகர் ரியோ டி ஜெனீரோ – யுனெஸ்கோ அறிவிப்பு

222 0

கட்டிடக்கலையின் உலகத் தலைநகராக ரியோ டி ஜெனீரோவை யுனெஸ்கோ அறிவித்தது.

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ), கட்டிடக்கலைஞர்களின் சர்வதேச ஒன்றியம் ஆகிய 2 அமைப்புகளும் இணைந்து நகர்ப்புற சூழலில் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும் நகரம் குறித்த ஆய்வை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. 

இதில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு, கட்டிடக் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நகரமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகர் தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ரியோ டி ஜெனீரோ நகரை கட்டிடக்கலையின் உலகத் தலைநகராக யுனெஸ்கோ அறிவித்தது.

ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானம் முன்பு அமைந்திருக்கும் ஏசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலை அந்நகரின் சிறப்பான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதுமட்டும் இன்றி நவீன மற்றும் பழங்கால கட்டிடக்கலைகளுடன் உலக அங்கீகாரம் பெற்ற தலங்கள் அந்நகரில் நிறைய காணப்படுகின்றன.

Leave a comment