வடக்கு மாகாண சபை கடந்த 05 ஆண்டுகளாக இருந்தும் பாடசாலைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் சரியான முறையில் கட்டிடங்கள் அமைக்கப்படவில்லை, மைதானங்கள் புனரமைக்கப்படவில்லை, மாணவர்களின் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், வடக்கில் இருந்த உறுப்பினர்கள் அதனை சரியான முறையில் கையாளவில்லை என்றும் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.


