குடாவெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கைது

282 0

தங்காலை குடாவெல்ல பிரதேச மீன்பிடி துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெலியத்தை, நாகளுகமுவ பிரதேசத்தில் வைத்து துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித் துறைமுக பகுதியில் கடந்த டிசம்பர் 25ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 04 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி 10 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

Leave a comment