கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸவுக்கு பிணை

226 0

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸவை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நுழைந்த சந்தர்ப்பத்தில் பதற்ற நிலமையை உருவாக்கியதற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரண்டு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

குறித்த நபர் எதிர்வரும் 01ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment