களனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான நீர் விநியோகம் இடம்பெறும் என்று அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான முகாமையாளர் பியல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்;..
கொழும்பு நகருக்கு புதிய நீர் விநியோகத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என்றும் முகாமையாளர் கூறினார்.
களனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மணல் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென 24 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


