லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு மார்ச் 08ம் திகதி விசாரணைக்கு

291 0

சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் 08ம் திகதி முதல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அந்த மனு நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இன்று (17) அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக செய்தியாளர் கூறினார். 

வழக்கு தொடர்பான எழுத்துமூல வாசிப்பை பெப்ரவரி 05ம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் சார்பான சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடுமையான உழைப்புடன் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், அதன் காரணமாக தம்மை குற்றமற்றவர்களாக விடுதலை செய்யுமாறு கோரியும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் மேன்முறையீடு செய்துள்ளனர்.

Leave a comment