பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

348 0

nz_flag_sticker_1சிறீலங்காவில் உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டுமென நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென, நியூசிலாந்து சர்வதேச மன்னிப்புச் சபை பணிப்பாளர் கிரான்ட் பேல்டன் வலியுறுத்தியுள்ளார்.

சிறீலங்காவில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் சிறீலங்காவின் மனித உரிமைச் செயற்பாடுகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால், அங்கு இன்னும் பல சிக்கல்கள் தீர்க்கப்படவேண்டியிருக்கும். அதற்கு நியூசிலாந்துப் பிரதமர் அழுந்தம் கொடுக்கவேண்டும்.

அவற்றில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் எனப்படுவது அப்பாவி மக்களைக் கடத்தி சித்திரவதைக்குட்படுத்துவதற்கான சான்றிதழ் ஆகும்.

மேலும், சிறீலங்காவின் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் அவசியம் கலந்துரையாடப்படவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியூசிலாந்து சென்றிருக்கும் இன்னிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.