தற்போதைய ஜனாதிபதிக்கு மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும்-தினேஸ்

331 0

பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக இருந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தவதற்கு அரசியலமைப்பில் விதிமுறைகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

பாதுக்கை பகுதியில் நேற்று (15) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தென் மற்றும் மேல் மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்திருப்பினும் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சட்டத்தை மாற்றி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பிரதமர் முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் இதுவரையில் பிரதமர் குறித்த அறிக்கையை சமர்பிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a comment