விமலின் வழக்கு மார்ச் மாதம் வரையில் ஒத்திவைப்பு

221 0

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வழக்கு தொடர்பான தனியார் வங்கியின் கணினி ஆதாரங்களை பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டிருந்த போதும் அதற்காக குறித்த வங்கி அனுமதி வழங்கவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

எனவே குறித்த வங்கியின் கணணி ஆதரங்களை பரிசீலனை செய்ய அனுமதி வழங்குமாநு விஷேட உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அதனடிப்படையில் குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்குடன் தொடர்புடைய கணணி ஆதரங்களை வழங்குமாறு குறித்த வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் குறித்த வழக்கை மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

2010 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment