மல்வானை ரக்ஷபானயில் இன்று (13) அதிகாலை 1.20 மணியளவில் மூன்று கடைகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
கடை ஒன்றுக்கு பின்னால் வைக்கப்பட்ட தீ கடைக்கு பரவியதனால், கடைகள் தீப்பிடித்துள்ளதாக பிரதேச வாசியொருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.
திட்டமிட்ட நாசகார செயல்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லையென அவர் உறுதியாக குறிப்பிட்டார்.
தீப்பிடித்த கடைகளில் ஒன்று பிரதேச சபை உறுப்பினர் அன்வரின் சகோதரர் முஹம்மத் அலி என்பவருடையது எனவும், மூன்று கடைகளில் ஒன்று பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கும் அறை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்துக்கு அதிகாலை பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


