மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

1544 40

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மாவெளி கங்கையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுவந்த 07 சந்தேக நபர்கள் நேற்று (12) இரவ ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

மாவெளி கங்கைக்கு நீர் எந்தி செல்லும் ஹட்டன் ஒயாவில் இந்த சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரனங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யபட்டவர்கள் ஹட்டன் ஸ்டென் பகுதியை சேர்ந்தவர்கள் என ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டதாகவும் கைது செய்யபட்ட 07 சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தபட உள்ளதாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment