வவுனியாவில் சட்டவிரோத வடிசாராயத்துடன் இருவர் கைது

126 0

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயில்முட்டையிட்ட குளம் பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்தியபோதே குறித்த நபர்கள் கைதுசெய்யபட்டனர்.

கைது செய்யபட்டவர்களிடமிருந்து 50 போத்தல் வடிசாரய போத்தல்கள் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்ய பயன்படும் கோடா 180 லீட்டரும், நவீன உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published.