இணக்கம் இல்லாவிடின் எதுவும் செய்ய முடியாது – ரணில்

3 0

புதிய அரசியல் அமைப்புக்கான அனைவருது கருத்துக்கும் சபையில்  சகலரும் இணக்கம் தெரிவித்தால் வழிநடத்தல் குழு  அடுத்த கட்ட நடவடிகையை எடுப்போம். இதில் இணக்கம் இல்லாது போனால் அதற்கு அப்பால் எம்மால் எதனையும் செய்யயியலாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அரசியல் அமைப்பு சபை இன்று காலை 10 மணிக்கு கூடிய வேளையில் அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவந்து பௌத்தத்தை அழிக்கின்றோம், நாட்டினை பிளவு படுத்துகின்றோம், வடக்கு கிழக்கை இணைக்கின்றோம் என்ற கருத்துக்களை அண்மைக் காலமாக எதிரணியினர் கூறி புதிய அரசியல் அமைப்பினை எதிர்த்து வந்தனர். 

ஆனால் இன்று முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் அவை ஒன்றுமே  இல்லை. சகலரதும் கருத்துக்களை சபையில் முன்வைத்துவிட்டோம். இப்போது சபை தீர்மானம் எடுக்க வேண்டும். அரசாங்கமாக எமது கடமையை நாம் நிறைவேற்றிவிட்டோம். இப்போது  சபையில் இது குறித்து இணக்கம் காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Related Post

பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்!

Posted by - September 13, 2016 0
பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு குறித்த சட்டமூலம் தற்போது நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சரின் விசேட அறிக்கை

Posted by - August 18, 2017 0
இலங்கையின் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமையன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக கருத்து…

ஐ.தே.க. வெற்றி பெற்ற மாநகர சபைகள் மஹிந்த குழு வசம்

Posted by - March 24, 2018 0
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்ற நீர்கொழும்பு மற்றும் காலி மா நகர சபைகள் என்பவற்றினதும், கட்டான பிரதேச சபையினதும்  அதிகாரங்களை…

நெவில் பெர்ணான்டோ அரசுடமையாக்குவது நெருக்கடி நிலைக்கான உரிய தீர்வில்லை

Posted by - June 28, 2017 0
மாலபே நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும் அந்த மருத்துவமனையை அரசுடமையாக்குவது இந்த நெருக்கடி நிலைக்கான உரிய தீர்வு இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள்…

டெங்கு ஒழிப்பு செயலணியினரை உடனடியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம்

Posted by - May 15, 2017 0
டெங்கு ஒழிப்பு செயலணியினரை உடனடியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். டெங்கு நோய் வெகுவாக பரவுகின்றமை மற்றும் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…

Leave a comment

Your email address will not be published.