மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பதே தற்போது காணப்படும் பிரச்சினையாகும். இந்த விடயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அது குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றி ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக செயற்பட்ட சிவில் சமூக அமைப்புக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சிகள் ஒன்றிணைந்து இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். ஒன்றில் புதிய முறையுடன் விகிதாசார முறைமையும் உள்ளடக்கி தேர்தலை நடத்த வேண்டும். அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும். இவை இரண்டில் ஒன்றையேனும் பின்பற்றி விரைவில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.