கலந்துரையாடல் மூலம் தீர்வு கிடைக்காவிடின் நீதிமன்றை நாடுவோம் – சுஜீவ

292 0

அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சுக்களை நியமிப்பதில் எழுந்துள்ள சிக்கல் நிலைக்கு கலந்துரையாடல்களின் மூலமே இறுதி தீர்மானத்தை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் இது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை பெற்றுக்கொள்ளும் நிலைபாட்டில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேற்க்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சுக்களின் எண்ணிக்கை திகரித்தாலோ இல்லாவிட்டாலோ நாட்டுக்கு அபிவிருத்திகளை துரிதகதியில் மெற்கொள்ள வேண்டுமானால் எத்தனை அமைச்சுக்களை வேண்டமானாலும் நியமித்துக்கொள்ளலாம். 

ஆயினும் அரசாங்கத்தின் செலவுகள் குறைத்துக்கொள்ளபட வேண்டுமானால் அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது சாதகமாகவே அமையும். எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலத்தில் காணப்பட்டது போன்று திரமையான அமைச்சரவையை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் உருவாக்கும் என்றார். 

Leave a comment