கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

300 0

வரகாபொல தொழிற்சாலை ஒன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (07) இரவு குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான நபர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் தனது சகோதரியின் மகனுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

துல்கிரய, பங்களாவத்த பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment