சந்திரிகா எம்.பி ஆவாரா?

321 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பதவி விலக செய்து, அவரின் இடத்திற்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சந்திரிகா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. அதேவேளை தனது தந்தை உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவரது மக்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார் என சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றாலும் இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லையென ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

Leave a comment