பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் – பா.ஜனதா

226 0

பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என பா.ஜனதா தலைவர் பேசியுள்ளார்.

ஏப்ரலில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஒடிசா, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜனதா தீவிரமாக பணியாற்றி வருகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்திலும் பா.ஜனதா தீவிரம் காட்டுகிறது. ஆனால் மம்தா பானர்ஜியை எதிர்க்கொள்வது என்பது கேள்விக்குரியானது. மாநிலத்தில் பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிப்போம் என்று கூறி பா.ஜனதா பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் பேசுகையில், பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று கூறியுள்ளார். 
மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திலிப் கோஷ், மம்தா பானர்ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அப்படியென்றால்தான் அவரால் சிறப்பாக பணியாற்ற முடியும். பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜியாகதான் இருக்க முடியும். அவர் ஆரோக்கியமாக இருக்கவும், வாழ்க்கையில் வெற்றிப்பெறவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஏனென்றால் எங்களுடைய மாநிலத்தின் தலையெழுத்து மம்தா பானர்ஜியை சார்ந்துள்ளது.  மேற்கு வங்காள பா.ஜனதாவை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், “இப்போது போட்டியில் முதன்மையாக இருப்பது மம்தா பானர்ஜிதான். அவருக்கு பின்னால் அதுபோன்ற நபரை நாங்கள் பெறுவோம். ஆனால் முதல் வாய்ப்பு மம்தா பானர்ஜிக்குதான்.  ஜோதி பாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை. முதல் பெங்காலி ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். அதனால் இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான நேரம்’’ என்று கூறியுள்ளார். திலிப் கோஷ் பேச்சு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பா.ஜனதாவிற்கு பெரும் அதிர்ச்சியாக எழுந்துள்ளது.

Leave a comment