வளர்ப்பு நாளை தீ வைத்து கொலை செய்த சந்தேகநபர் கைது

388 0

நீர்கொழும்பு, கொப்பரவத்தை சந்திப் பிரதேசத்தில் வீடொன்றின் வளர்ப்பு நாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவத்தின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெரியமுல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தில் கைதாகியுள்ளதுடன், சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். 

நீர்கொழும்பு, கொப்பரவத்தை சந்திப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட சாலி என்ற பெயருடைய நாயை அதன் கூண்டுக்குள்ளேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவம் கடந்த 31ம் திகதி இடம்பெற்றது.

Leave a comment