பாணந்துறை, அருக்கொட சுற்றுவட்ட வீதி பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை வலய சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவ மற்றும் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


