போராட்டத்தால் பறிபோனது பிராந்திய முகாமையாளரின் பதவி

205 0

ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தினால் இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய முகாமையாளர் பதவி நீக்கப்பட்டார். 

வடபிராந்திய இலங்கை போக்குவரத்துக் சபையின் நிர்வாத்தின் சீர்கேடுகளை  கண்டித்தும், வடபிராந்திய முகாமயாளரை இடமாற்றம் செய்யவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்ககள் நேற்றுமுன்தினம் பணிப் புறக்கணிப்பு பேராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.  

இதில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார், அவரின் நிர்வாகத் திறமையற்ற செயற்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு எதிராக இரண்டு தடவைககள் போராட்டம் நடத்தி உயர் பீடங்களுக்கு எமது கோரிக்கைகளை முன்வைத்திருதோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையிலே நாம் வடபிராந்திய ஏழுசாலைகளையும் உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டோம் என தொழிற் சங்கத்தினர்  தெரிவித்தனர்.

இப் பணிப்புறக்கணிப்பினால் பயணிகள் பெரும் அவலங்களை எதிர்கொண்ட நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்தினால் வடபிராந்திய முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதுடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் வழமைக்குத் திரும்பின.

Leave a comment