“அலோசியஸுக்கும், அரசியல் கைதிகளுக்கும் சட்டம் சமனானது” – அருட்தந்தை சக்திவேல்

494 0

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இதுவரை காலமும் தேசிய ரீதியில் வலுவாக வலியுறுத்தி வந்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அதனூடாக தமிழர் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும்பான்மை இனத்தவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனினும் அரசாங்கத்திடமிருந்து எவ்வித முன்னேற்றகரமான தீரவுகளும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. 

இந்நிலை தொடருமாக இருந்தால் அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு தீர்வினைக் கோரி நாங்கள் சர்வதேசத்தை நோக்கித் தள்ளப்படும் நிலை உருவாகும். இது உள்நாட்டு பிரச்சினை என அரசு கருதுமாயின் அவர்களே தீர்வைப் பெற்றுத்தர வேண்டும். எம்மை சர்வதேசத்தை நோக்கித் தள்ளும் காரணியாக அரசாங்கமே இருக்கக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த வருடத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment