தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது!

302 0

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட போடைஸ் பொதுமக்களுக்கான நிரந்தர வீடுகளை அமைக்கும் பகுதிளை  நேற்று புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவு செய்துள்ளனர்.

போடேஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் பகுதியை நேற்று ஆய்வு செய்த புவியியல் ஆராய்ச்சி நிபுணர்களின் அறிக்கையில் குறிபிட்டிருந்த பகுதியை தெரிவு செய்ய 2ஆம் திகதியன்று விஜயம் செய்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் சிவனேசன்,டிக்கோயா டிரஸ்ட் காரியாலய அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமையாளருடன் தெரிவு செய்யப்பட்ட இரு இடங்களை 3ஆம் திகதியன்று மீண்டும் புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

அச்சந்தர்பத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் கூறுகையில், மக்களின் விருப்பத்திற்கு அமைய இடங்களை தேர்வு செய்து முகாமையாளரிடம் கூறியுள்ளோம் அத்துடன் புவியியல் ஆராய்ச்சி நிபுணர்களின் அறிக்கைக்கு அமைய அடிக்கல் நாட்டும் வைபவம்  புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றவுள்ளதுடன்  இப்பணி துரித கதியில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a comment