பணம் மற்றும் பதவிகளை லஞ்சமாக வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிதாவ வைக்க முயற்சித்த அனைவருக்கும் சட்டத்தினால் தண்டனை வழங்கப்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் அரசியல் மாற்றத்துக்காக கடந்த 51 நாளில் மைத்திரி, மஹிந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தெரிவித்து தனக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


