சூழ்ச்சியால் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சி இன்னும் ஓயவில்லை – நிரோஷன் பெரேரா

341 0

சுதந்திரக்கட்சி, பொதுஜனபெரமுன கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டாலும் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகார முறைமையை கையாள முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மிலோதா கட்டத்தொகுதியில் அமைந்துள்ள தனது அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கும் பொழுது ஊடகவியாலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும்  தெரிவிக்கையில்,

நாட்டில் அரங்கேறிய அரசியல் சூழ்ச்சி நிலை நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய அடக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்னமும் கூட அதன் தாக்கம் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது. ஆட்சியை கைப்பற்ற  அனைத்து கட்சியினரும் பல்வகைப்பட்ட முறைகளை கையாள்கின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. 

எனினும் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான முறையில் ஆட்சியைக்கைப்பற்ற முயல்வார்களாயின் ஜனநாயகத்தை நிலைநாட்ட இயலாத நிலை ஏற்படும் . அதற்கு தகுந்த பதிலை மக்கள் அவர்களுக்கு அழிப்பார்கள்  . 

அத்துடன் நாட்டின் பொருளாதார வழர்ச்சிக்கும், மாணவர்களின் தொழிற்தகைமை மற்றும் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமூர்த்தி திட்டங்களினூடாக தகுந்த உதவிகளை பெற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல்  இலஞ்ச ஊழல் அற்ற நிலையை உருவாக்கவும் மக்களுக்கு தகந்த பலனை பெற்றுத்தருவதற்கான சேவையை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

Leave a comment