வெள்ளத்தால் 257 வீதிகளும் 57 பாலங்களும் சேதம்

479 0

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளதாக மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை,  வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
இவற்றுள் பல வீதிகள்  மிகவும் மோசமாகவும், ஏனையவை பகுதியளவிலும் சேதமுற்றுள்ளன.
இவ்வாறு சேதமுற்றுள்ள வீதிகளை விசேட நிதி ஒதுக்கீட்டின் விரைந்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  இல்லையெனில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடையூறாகக் காணப்படும் என்றும்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment