அமெரிக்கா வாக்குறுதிகளை காப்பாற்ற தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும்

412 0

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்ற தவறினால் வடகொரியா புதிய வழிமுறையை நாட வேண்டி இருக்கும் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்தனர். இருவரும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து வரலாற்று நிகழ்வாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave a comment