கடந்த ஆட்சியில் பலகாயாக்களை உருவாக்கி சிங்கள-முஸ்லிம் மோதலை தூண்டினர்- ரங்கே பண்டார

195 0

அதிகாரத்தை இழந்த குழு நாட்டில் இனங்களுக்கிடையில் மோதலை மீண்டும் ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

திகனவில் இன்று (31) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிங்கள – முஸ்லிம் மக்களிடம் மோதலை ஏற்படுத்த இந்த குழு முயற்சிக்கின்றது. அக்குரனையில்,பேருவளையில் மோதலை ஏற்படுத்தினர்.  இதுபோன்ற ஒரு மோதல் நிலையை புத்தர் சிலையை உடைத்து மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

பொதுபல சேனா என்கிறார்கள். சிங்ஹலே என்கிறார்கள். ராவணா பலய என்கிறார்கள். தாயகத்தை மீற்கும் அமைப்பு என்று கூறுகிறார்கள். மஹசோன் பலகாய என்கிறார்கள். இவ்வாறாக ஒவ்வொரு சொஹோன் குழுக்களை உருவாக்கி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Leave a comment