மீமரே பகுதியில் ´தாலி கட்ட´ எனும் இடத்தில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நீராட தகுதியற்ற இடமான தாலி கட்ட எனும் இடத்தில் குறித்த இளைஞன் நீராட சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்லம்பிட்டிய, கடுபெலெல்ல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.
பொலிஸார் மற்றும் பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


