அரசாங்கத்தின் நகர்வால் பொருளாதாரத்துக்கு ஆபத்து – திஸ்ஸ விதாரண

202 0

அபிவிருத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தி அரசாங்கம் தேர்தலை இலக்காகக்கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் ஆபத்து இருக்கின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

அரசாங்கம் ஆரம்பித்துள்ள கிராம எழுச்சி வேலைத்திட்டம் ஊடாக ஒரு கிராமத்துக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது. அந்த நிதியும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பயன்பெறும் வகையிலே செலவிடப்படும் என ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனே தெரிவித்திருக்கின்றது. 

அதனால் அரசாங்கம் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு மக்களுக்கு லஞ்சம் வழங்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய ஆபத்தாகும் என்றார்.

Leave a comment