பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை விரைவில்!

25 0

தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில், 

இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் இவற்றை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்தக் கையேட்டை சரியான முறையில் விளங்கிக்கொண்டு தாம் விண்ணப்பிக்கக்கூடிய ஆகக்கூடிய கற்கை நெறிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது முக்கியமானது.

சில மாணவர்கள் இரண்டு நெறிக்கு அல்லது 3 கற்கை நெறிகளுக்கு மாத்திரம் விண்ணப்பிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பொருத்தமான கற்கை நெறி இல்லாமல் போகின்றது. 

ஆரம்பத்திலேயே சரியான கோரிக்கையை முன்வைக்காமையால் பின்னர் அந்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. புதிதாக சில கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.