மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு ஜனவரி மாதமளவில் தீர்வு- ராஜித

322 0

கடந்த 2 மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு ஜனவரி மாதமளவில் தீர்வு காணப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

கடந்த தினங்களில் இருதய நோய்க்கு போதுமான அளவு ஸ்ரென்ட் களஞ்சியப்படுத்தப்பட்டதனால் பிரச்சினைகள் ஏற்படவில்லை. எதிர்வரும் தினங்களில் இவற்றைப் பெறுவதற்கான பெறுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இலவசமாக ஸ்ரென்ட் வழங்கப்படுவதனால், தற்போது முன்னரிலும் பார்க்க இருதய நோயாளர்களுள் 75 சதவீதமானோர் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்துள்ளது. கடந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டதனால், 4 தசம் 7 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்தது. 

சீனாவின் நிதியுதவியின் கீழ் எதிர்காலத்தில் இருதய நோய் வோர்ட் தொகுதியொன்று அமைக்கப்படும் என்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார். 

Leave a comment