கைதிகளின் விடுதலை அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்குகள்தான் காரணமா?

502 0

1315155332Untitled-1தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு எட்டப்படாத தன்மைக்கு அரசியல் வாதிகளின் அசமந்தப் போக் குகள்தான் காரணமா என்கின்ற பலமான சந்தேகங்கள் மீண்டும் எழுப்பப்படுகின்றது.

இலங்கையின் பல சிறைகளிலும் நீண்டகாலங்களாக சுமார் 184 தமிழ் அரசியல்க் கைதிகள் நீண்டகாலங்களாகத் தடுத்து வைத்திருப்பதணை சுட்டிக்காட்டி இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் பலரும் எழுப்பிய நிலையில் அது பலணளிக்காமல் போனமையயினால் முளுநாள் கதவடைப்பு கைதிகள் தொடர் உண்ணாவிரதம் எனப் போராட்டங்களும் நீண்டமையினால் கூட்டமைப்பும் விழித்தெழுந்து சிறைகளிற்கும் சென்று உத்தரவாதங்களின் பிரகாரம் உண்ணாவிரதங்கள் கைவிடப்பட்டன.

இதற்காக அப்போது கூட்டு முயற்சிக்கு கிடைத்த மொத்த அறுவடையாக சகல விதங்களுமாக 53பேர் இதுவரையில் வெளிவந்துள்ளனர்.

இவர்களில் ஒர் இருவர் சிங்களக் கைதிகள் மேலும் சிலர் அரசியல் காரணங்களிற்கு கைது செய்யப்படாத போதிலும் அரசு அவர்களின் வழக்குகளை அதன் அடிப்படையிலேயே தாக்கல் செய்திருந்தது. இதில் ஓர் இருவர் போதைப்பொருள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரும் கிளிநொச்சியில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் நீங்களாக தற்போதும் மூன்று பெண்கள் உட்பட 131 அரசியல் கைதிகள் உள்ளனர் இவர்களில் ஒருவர் மரண தண்டனை விதிக்கப் பட்டவர் 6பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் .

ஒருவர் 200 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு மூவரிற்கு 300 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுடன் 20 ஆண்டுகளிற்கு மேலான தண்டனை வழங்க 06 கைதிகள் உள்ளனர். இவர்களுடன் 3 ஆண்டுகளிற்கும் குறைவான தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 15 பேரும் தற்போது வரைக்கும் சிறையில் உள்ள கைதிகளில் அடங்குகினறனர்.

இவ்வாறு உள்ள மரண தண்டனைக் கைதி முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் கொலைக் குற்றச்சாட்டின் பெயரிலும் 300 ஆண்டு சிறை இதனை 30 ஆண்டுகளில் அனுபவிக்க முடியும் எனத் தீர்ப்பிட்ட மூவரும்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீதான கொலை முயற்சி வழக்கிலும் சிறை வைக்கப்பட்டள்ள அதேநேரம். டக்ளஸ் தேவானந்தா மீதான தாக்குதல் முயற்சி கைதிகளும் உள்ளனர். அதில் ஒருவர் பெண்கைதியாவார்.

தற்போது சிறைகளில் வாடும் குறித்த 131 கைதிகளும் மகசீன் சிறையில் 65 பேரும் பூசாவில்17 பேரும் வெலிக்கடை சிறையில02; பேரும் உள்ளதோடு கண்டி போகம்பரையில் 12 அநுராரம் சிறைச்சாலையில் 30 பேரும் உள்ள அதேவேளையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 04 பேரும் உள்ளனர்.

மகிந்த காலத்தி அனுபவித்த சிறைவாழ்வு மைத்திரி காலத்தில் நீங்கி சமூகத்தில் வாழத் துடிக்கும் இவர்களின் மறுவாழ்விற்காக உரத்த நியாய பூர்வமான குரல்களை எதிர்பார்த்து யாருக்காக நாம் பாடுபட்டோமோ அவர்களின் குரலும் பிரதிநிதிகள் குரலும் ஒலிக்கும் என நான்கு சிவர்களை மட்டுமே ஆண்டுக்கணக்காக பார்த்துச் சலித்த உறவுகள் மீண்டும் போராடத் துடிப்பதற்குள் இவர்களிற்காக மக்களின் பிரதிநிதிகள் மேற்கொள்ளப்போவது எதனை என்ற கேள்வியே தற்போது எழுப்பப் படுகின்றது.

ஏனெனில் நல்லாட்சி அரசு என்பதும் வெறும் சொல்லாட்சி அரசாகவே இவர்களின் வாழ்வில் மட்டுமன்றி இடம்பெயர் மக்களின் மனதிலும் மாறிவிட்ட சூழலில் சொல்லாட்சி அரசின் ஆட்சிக்கால மக்கள் பிரதிநிதிகளின் பதிலை சிறையில் வாடும் உறவுகள் வேண்டி நிற்பதும் காலத்தின் கட்டாயமே.

Leave a comment