ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம்

89987 0

vijitha-herath-2-450x301மத்திய வங்கியின் ஆளுனர் யாராக இருந்தாலும் ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டின் நிதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் மத்திய வங்கியில் தசம தான கொடுக்கல் வாங்கல்களினால் கூட நாட்டு மக்கள் கோடிக் கணக்கான நட்டத்தை எதிர்நோக்க நேரிடலாம்.

தற்போது நாட்டில் பாரியளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு சில பிரதான காரணிகள் உள்ளன.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளினால் நாட்டுக்கு பாரியளவில் பணம் இழக்கப்பட்டிருந்தது.

அதே போன்று மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போது நாடு பாரியளவு கடன் சுமையில் சிக்கியிருந்தது.இந்தக் காரணிகளினால் எழுந்த நிதி நெருக்கடிகள் மேலும் மேலும் நீண்டு கொண்டே சென்றுள்ளது.

தற்போதைய அரசாங்கமும் உறவினர் கொடுப்பனவுகள் மற்றும் ஊழல் மோசடிகளினால் பணத்தை விரயமாக்கி வருகின்றது.

100 நாள் ஆட்சியின் போது மத்திய வங்கியின் ஆளுனர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் 100 நாட்களுக்கு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சலுகை வழங்கினார்.தனது மருமகனுக்கு பிணை முறிகளை விற்பனை செய்து இந்த சலுகையை வழங்கியிருந்தார்.

ஜே.வி.பி இந்த மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து நாடாளுமன்றத்தையும் மக்களையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா சுனில் ஹந்துனெத்தி இது குறித்து அறிவித்திருந்தார்.

மத்திய வங்கியின் ஆளுனரை பணி நீக்குமாறு நாம் கோரியிருந்தோம்.தற்போதைய மத்திய வங்கியின் ஆளுனர் மட்டுமன்றி இதற்கு முன்னர் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ராலின் ஊழல் மோசடிகள் குறித்தும் நாம் அம்பலப்படுத்தியிருந்தோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a comment