மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

9492 0

மஸ்கெலியா பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்ற பட்டதாக பிரதேச சபை தவிசாளர் திருமதி.செம்பகவள்ளி தெரிவித்தார்.

தவிசாளர் மேலும் கூறுகையில், 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆறு உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆறு உறுப்பினர்களும் தேசிய சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் அடங்களாக பதினான்கு உறுப்பினர்கள் கொண்ட இச்சபையில் இம்முறை இடம்பெற்ற வரவு செலவு திட்ட கூட்டத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்ற பட்டதுடன் எதிர் காலத்தில் எமது வேலைத்திட்டங்களிலும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட்ட முடிவதுடன் உறுப்பினர்களின் வட்டாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

Leave a comment