இருவேறு விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உட்பட மூவர் பலி

306 0

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ருவன்வெல்ல, துன்தொல பகுதியில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அமிதிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக அவிஸ்ஸாவெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தெவமோட்டே, ஆண்டிஅம்பளம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் பேருந்தை நிறுத்துவதற்கு முன்னர் பேருந்தில் இருந்த இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல மற்றும் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment