விரைவில் இரு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்- வஜிர

341 3

அரசியலமைப்பின்படி அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 என்பது ஜனாதிபதியும், பிரதமரும் சேர்க்கப்படாமலேயே பார்க்கப்பட வேண்டும் எனவும், இதனால், இன்னும் இருவர் விரைவில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஹினிதும பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்ட எவரும் இதுவரை கைவிடப்படவில்லை. வேறு கட்சியிலிருந்து வருவபவர்களையும் வெளியார் என நாம் கருத்தில் கொள்வதில்லை. குழுக்களை இணைத்துக் கொள்ளாமல் தேர்தலை வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment